ஞாயிறு, 13 மார்ச், 2011

கலைத்தீபம் கண்ட கலைமகள்!

சாந்தமருதூராம் கிழக்கு மண்ணில்
ஆய்ந்து கலை செய்யும் அறிவையாள் ஹிதாயா -
                          
                                         வாய்மையின்
அந்தி வானத்து அழகு நிலவாம்
இந்த மண்ணில் இவள் பெருமை !

உள்ளத்து ணர்வுக்குள் உறங்காப் படைப்புக்குள்
தெள்ளத் தெளிவாம் செகத்திடை மாந்தர்க்கு-
                                                                வெள்ளையாய்     
தாள் பதிக்கும் தகைசேர் இலக்கியங்கள்
கொள்கை கொள்ளுமாம் குணம்.

கை கொண்டு நடக்கும் இவழெழுத்துப் பயணங்கள்
மெய் கொண்டு வாழுமாம் மேதினியில் - மை கொண்ட
தையல் இவள் பேறு தவழும் நெஞ்சுக்குள்
வையாது வாழுமாம் வகை.

பெண்ணாக நின்று பேசுகின்ற மனிதங்கள்
கண்ணாகிக் கலைக்குள் காவலாய் விழிக்கும்-
                                                                எண்ணியே

வன்மைக்கு எதிராக வழக்காடி நின்று
    கண் துடைக்குமாம் கலை.

கலைமகள் கையேந்தும் தூரிகைப் பணிகள்
நிலைகளில் நிற்கும் நீக்கமறு சேர்ந்து -தலையாய்
கலையில் குடிகொண்டு கணக்குமாம் மண்ணில்
காலத்தால் இவள்பணி கணிப்பு

பூக்கும் கரம்பட்டு புதுப்புது நிஜங்கள்
ஆக்கும் பணிக்குள் அரண்மனை அமைக்கும் -
                                                              பக்கமாய்
எக்கோணம் விரிந்தாலும் எழுத்துக்கள் எரியும்
மிக்க பணியாம் பணி.

பட்டமும் பல்கலையும் பாவை உனக்காகி
தொட்ட பணிக்காக தொடர்ந்தவை சுகமாய்-
                                                               எட்டியே
சுட்ட தங்கமாய் சுடரொளி தந்தவை
கட்டாயம் காட்டுமாம் கணிப்பு.

பத்திரிகை வானொலிப் பட்டறைத் தளங்களில்
முத்திரை பதித்தவைகள் முன்னுரை கொள்ளும்-
                                                                 சித்தங்களில்
சித்திரமாய் சீர்மேவும் சிறப்பகங்கள்
       நித்தம் வாழுமாம் நியதி!


கலைமகள் ஹிதாயா ரிஸ்வியை பாராட்டி கலாப்பூஷணம் கவிஞர் பதியத்தலவை பாறூக் அவர்கள் கலைத்தீப விழாவின் போது பாடிய கவிதை இது...
          

8 கருத்துகள்:

 1. Followers Widget not available.
  Kindly register my mail id and send your future blogs to my mail id.
  rathnavel_n@yahoo.co.in
  Thanks.
  N.Rathnavel.

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை.
  அழகு தமிழ்.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. பாவரசின் கவிதையினழகோ அழகு இங்கு
  பைந்தமிழ்க்கு பணிசெயும் முறையு மழகு
  நாவில் சுவையூறும் நற்றமிழ்க் கழகாய்
  நற்தொண்டு செய் கலைமகள் வாழி! வாழி!!

  பெண்மைக்குள் நின்று பார்போற்றிடசெயும்
  புனிதப் பணிக்கு ஈடேது ஈடேது -தமிழ்
  விண்ணோக்கி பற்றிப் படர்ந்திட கொழுகொம்பு
  வித்தகர் போற்று முத்தக் கலைமகளே!

  கலைத்தீபம் வழங்குகிறாள் நலமாய்
  கலையில் பல்லோரும் அகங்குளிர
  மலைபோலும் நற்குணத்தாள் -இங்கு
  மனிதத்துடன் செய்கிறாள்பணி - வாழ்க!

  -தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி அண்ணா என்றும் உங்கள் வாழ்த்து என் வளர்ச்சிக்குஉரம் அண்ணா

  பதிலளிநீக்கு
 5. கலைத்தீபம் வழங்குகிறாள் நலமாய்
  கலையில் பல்லோரும் அகங்குளிர
  மலைபோலும் நற்குணத்தாள் -இங்கு
  மனிதத்துடன் செய்கிறாள்பணி - வாழ்க!மிக்க நன்றி
  -தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

  பதிலளிநீக்கு

 6. ஆக்கம் ஊக்கம் தந்து
  இளம் கவிஞர்களின்
  ஏக்கம் போக்கியது
  உங்கள் தடாகம்

  இங்கு தடம்
  பதித்தவர்களோ ஏராளம்

  அலை கடல் போல கவி பாடும்
  கலை மகள் ஹிதாயா
  நீ கவி உலகைக் காக்க
  வந்த தாயா...

  நிற்காது ஓடுகிறாயே
  பேரிலக்கிய நதியா...
  இருண்ட காலத்தைப் போக்க
  வந்த சுடர் ஒளியா...

  பெண்ணியம் பேசும் பெண்பாரதி
  நீங்களல்லவா
  மகா பாரதியின் சந்ததி
  பொற்கிழி வாங்கிய தமிழச்சி
  உன் புகழோ இமயமலை உச்சி
  மணக்குது பாரு
  பட்டி தொட்டி

  கவிதைகளின் ராணி
  உன் கவிப்பாக்களில்
  மொய்க்கிறது தேனி
  மூத்த இலக்கிய ஞானி
  இளம் கவிஞர்களை
  ஏற்றுவித்த ஏணி

  சூரிய அறிவு உன் அறிவு
  அதை சூறையாட நினைக்கிறது
  என் அறிவு
  தாயைத் தேடும் கன்றாய்
  உங்கள்
  கவிதைகளைத் தேடிப்படிக்கின்றேன் நன்றாய்

  நீங்கள் அடிக்க வில்லை தம்பட்டம் ஆதலால் பெற்றீர்கள் பல பட்டம
  வெற்றி நடை போடுகிறம்மா
  உங்கள் கலை இலக்கிய வட்டம்

  உயிரெழுத்து
  மெய்யெழுத்து
  உயிர் மெய்யெழுத்து
  ஆயுத எழுத்து

  இவை எல்லா
  எழுத்தும்
  உன்னாலே பெறுகிறது சத்து
  புன்னகையின் சொத்து
  சாய்ந்தமருது தந்த
  கலை முத்து

  வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரி

  பதிலளிநீக்கு
 7. ஆழமான உங்கள் மனதின் ஊற்றிலிருந்து சிந்திய கவித்துளிகள் என் நாவினை தடவிச்சென்றது
  அதனால் தவிப்பு மாறிச் சென்றது மிக்க நன்றி தம்பி அன்பின் கல்குடா றியாஸ்

  பதிலளிநீக்கு