1988 ல் இளைஞர் சேவைகள் மன்றமும், இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடாத்திய கவிதைப்போட்டியில்அகில இலங்கை , ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது பெறப்பட்டது.
1999 ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற ரத்ன“தீப விருது விழாவில் (ரத்ன தீப”சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர்) ( ரத்னதீபம் ) பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2002 இல் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அனுசரணையோடு நடாத்தப்பட்ட உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இளம் படைப்பாளிக்கான விருது பெறப்பட்டது.
2005 ஆம் ஆண்டு மாவனெல்ல உயன்வத்தையில் நடைபெற்ற "ப்ரிய நிலா" இலக்கிய விழாவின் போது (கலை அரசி ) பட்டமும் விருதும் பெற்று கௌரவிக்கப்பட்டது.
2009 இல் பல்கலை வேந்தர் , ஞானக்கவி , சட்டத்தரணி , பிரதியமைச்சர், அல் - ஹாஜ் கெளரவ எஸ்.நிஜாமுதீன் (பா.உ) அவர்களால் நிந்தவூர் ஆர்.கே.மீடியா பணிப்பாளர் ராஜகவி ராஹில் இலங்கை வானொலி அறிவிப்பாளர் அவர்களின் சார்பில் ) கவித்தாரகை பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2011 இல் சாய்ந்தமருது லக்ஸ்டோ அமைப்பினால் கலைமுத்து ( மருதமணி , முத்து) ஆகிய இரு பட்டங்களும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2011 இல் மகாத்மா காந்தி அவர்களின் ஜனனதின நினைவு விழாவின் போது கண்டி மலையாக கலை கலாசார சங்கத்தினால் (கவிதைச் சிற்பி ) பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2012 இல் அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் ( சாம ஸ்ரீ, தேசகீர்த்தி ,கலாசூரி ,சமூக ஜோதி) ஆகிய நான்கு பட்டங்களும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
.2012இல் எக்ஸ்டோ அமைப்பு கலை உலகில் ஆற்றி வந்த கவிதை இலக்கிய சேவைக்காக திறமைக்கு மரியாதை - (பாவரசு பட்டமும்) விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2012 இல் ஏ .எம் ராஜா , ஜிக்கி அவர்களின் ஜனன தின நினைவு விழாவின் போது மலையக கலை கலாசார சங்கத்தினால் (இலங்கையின் சிறந்த பெண் கவிஞருக்கான பட்டமும் ) விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2012 இல் இலங்கை தேசிய கவிஞர்கள் சம்மேளனத்தின் 23 வது விருது வழங்கல் மற்றும் கௌரவிப்பு விழாவில் காவிய ஸ்ரீ, (காவியத் தங்கம்) எனும் பட்டம் பெறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக